பெரும் வெள்ளத்தில் மட்டக்களப்பு – அச்சத்தில் மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு திருகோணமலை வீதியில்  ஊறணி மற்றும் பிள்ளையாரடி போன்ற இடங்களில்  வாவிநீர் பெருக்கெடுத்து பிரதான வீதியில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துச் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய ரக வாகனங்கள் அச்சமான நிலையிலேயே பயணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக இதுவரை 1958 குடும்பங்களைச் சேர்ந்த 6571 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 541 குடும்பங்களைச் சேர்ந்த 1887 இடம்பெயர்ந்து 5 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்கள் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் தட்டுமுனை- மாணிக்க விநாயகர் வித்தியாலயம்,      ஊரியன் கட்டு – அரசினர்  தமிழ் கலவன் பாடசாலை, கட்டுமுறிவு- அரச தமிழ் கலவன் பாடசாலை, வம்பிவெட்டுவான் – அரச தமிழ் கலவன் பாடசாலை,    கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பொண்டுகள் சேனை- கணபதி வித்தியாலயம்   ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்ட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]