இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

இதற்கமைய, முதலாவது தம்புள்ளை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கட் ஒருநாள் அணியின் புதிய தலைவர் உபுல் தரங்கவின் தலைமையில் அணி களமிறங்கவுள்ளது.

பெரும் சவால்களுக்கு
upul tharanga

டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி, தமது திறமையை வெளிப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதுமட்டுமன்றி, 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெற, இந்தத் தொடரில் 2 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டும்.

பெரும் சவால்களுக்கு

இவ்வாறான முக்கியமான நிலைமையிலேயே இலங்கை அணி, இன்று களமிறங்குகிறது.

பெரும் சவால்களுக்கு

1979 முதல் 2017 ஆம் ஆண்டுவரை இரு அணிகளுக்கும் இடையில் 150 ஒருநாள் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

ஆவற்றில் 83 போட்டிகளில் இந்திய அணியும், 55 போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது.

11 பேட்டிகள் முடிவுகளின்றியும், ஒரு போட்டி சமநிலையிலும் முடிவுற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]