பெரும் சர்ச்சையை கிளப்பிவுள்ள பஜனை பாடல்- நடிகை கியா அத்வானி கொடுத்த விளக்கம்

பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹர் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்தில் நடிகை கியா அத்வானி ஆசிரியையாக நடித்துள்ளார். அவரின் கணவரான விக்கி கவுஷலால் அவரை படுக்கையில் திருப்தி படுத்த முடியவில்லை. இதையடுத்து கியாரா சுயஇன்பத்தை நாடுகிறார்.

இதற்காக, எலக்ரானிக் உபகரணம் ஒன்றை வாங்கி சுயஇன்பம் அனுபவிக்கிறார். இவர் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிக்கு பின்னால் பிரபல பாடகி லதா மங்கேஷர் பாடிய கபி குஷி கபி கம் என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.

இது அவரை மிகவும் வேதனையடைய செய்துள்ளது, ஒரு பெண் சுய இன்பம் அனுபவிப்பதற்கு இந்த பாடல் தான் கிடைத்ததா என்று மிகவும் காட்டமாக கேள்வியை எழுப்பியுள்ளார். இது, பாலிவுட் உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் சுயஇன்பம் அனுபவிப்பது குறித்து பேசுவதை பாவம் என்று நினைத்த மக்கள் தற்போது சாதாரணமாக பேசுகிறார்கள். இந்த காட்சிக்கு போய் இவ்வளவு பெரிய சர்ச்சை எதற்கு என்று இனி வரும் காலங்களில் மக்கள் நினைப்பார்கள். ஒரு காலத்தில் முத்தக் காட்சிகள் பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முத்தக் காட்சிகள் எல்லாம் சாதாரணம் என்கிறார் கியாரா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]