பெரும் சர்ச்சைக்குரிய ஐஎஸ் சின்னம்  பொறிக்கப்பட்ட டீசேர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்ட இளைஞர்கள்

தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தின் தொண்டியில் 26 முஸ்லீம் இளைஞர்கள் ஐஎஸ் சின்னம்  பொறிக்கப்பட்ட டீசேர்ட் அணிந்து ஒன்றாக படமெடுத்துக்கொண்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

தொண்டியில் உள்ள மசூதியொன்றின் முன்னாள் 26 இளைஞர்களும் இவ்வாறு ஒன்றாக படமெடுத்துள்ளதோடு குறிப்பிட்ட புகைப்படத்தை அவர்களில் ஒருவர் முகநூலில் பதிவு செய்ததை தொடர்ந்து பலர் அதனை பார்வையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறிப்பிட்ட இளைஞர்களிற்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் எந்த நேரடி தொடர்புமில்லை என்பது தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளதுடன்  திருப்பூரில் உள்ள ஆடைதொழிற்சாலையொன்றில் ஐஎஸ் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட்களிற்கு உத்தரவிட்ட அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞனை விசாரணை செய்ததாக தெரிவித்துள்ள பொலிஸார் குற்றம் என கருதுவதற்கான  ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ரஹ்மான் தாய்லாந்தில் வேலை பார்ப்பவர் அவர் விடுமுறையின் போது  இந்தியா வந்துள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் இந்திய தாதிமார்களிற்கு உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படாமல் அவர்களை விடுவித்த ஐஎஸ் அமைப்பினை பாராட்டவே இந்த புகைப்படத்தை எடுத்ததாகவும்குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் போது ஐஎஸ் உட்பட ஏனைய தீவிரவாத  அமைப்புகளுடன் இவர்களிற்கு தொடர்பில்லாதது தெரியவந்துள்ள போதிலும் இவர்களை தொடர்ந்தும் கண்காணிப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறிப்பிட்ட புகைப்படம் தற்போது முகநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]