பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஆட்சி நடத்தலாம்- மஹிந்த அதிரடி அறிவிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க பொதுத் தேர்தல் ஒன்றிற்கு செல்வதே சிறந்த தீர்வு என மஹிந்த ராஜபக்ச எம்.பி நேற்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.முன்னணி அரசாங்கத்தை எழுந்தமானமாக ஜனாதிபதி கலைக்கவில்லை. நெருக்கடி நிலைமை உச்சமடைந்ததை தொடர்ந்தே ஜனாதிபதி அரசாங்கத்தை கலைத்தார். நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதே முதலாவது தேவை. எமக்கு பெரும்பான்மை பலமில்லையென்கிறார்கள். ஆனால் பல நாடுகளில் பெரும்பான்மை பலமில்லாவிட்டாலும், அரசாங்கங்கள் உள்ளன என்றும் ராஜபக்சவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதற்கு ஐ.தே.க உடனடியாக பதிலளித்துள்ளது.ஐதேகவின் தவிசாளர் கபீர் காஷிம் இது தொடர்பில் தெரிவிக்கும்போது- ஐதேகவும் தேர்தலிற்கு தயாராகவே இருக்கிறது. ஆனால் முதலில் சட்டபூர்வமான அரசாங்கம் நிறுவப்பட வேண்டும். ஒரு ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]