பெருமளவான மக்கள் கூட்டத்தை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சினர் திட்டம்

பெருமளவான மக்கள் கூட்டத்தை திரட்டி ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி குறித்த கூட்டத்தை பெருமளவான மக்களின் ஆதரவுடன் கொழும்பில் நடத்த தீர்மானித்துள்ளதோடு, இதுகுறித்த அறிவிப்பினை, நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ‘கொழும்புக்கு மக்கள் சக்தி’ என்ற பெயரில், நடைபெறுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், ‘அதிக வரிச்சுமை, அரச சொத்துக்களை விற்பனை செய்கின்றமை, வாழ்க்கைச் செலவு அதிகரித்தல், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்குதல் என்பனவற்றை அறியாதவர்கள்போல அரசாங்கத்தினர் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கின்றனர். இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]