பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் இணைக்க அமைச்சரவை அனுமதி

பெருந்தோட்ட பாடசாலைகளில் பற்றாகுறையாக காணப்படும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பிரச்சினைக்கு உடனயாக தீர்வுகாணும் முகமாகவும், மலையகத்தில் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் எண்ணத்திற்கு அமைவாக தரம் உயர்த்தி அபிவிருத்திச் செய்யபட்டுவரும் 25 பாடசாலைகளில் காணப்படும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கில ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாகவும் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்டையில் மீண்டும் மலைய தோட்ட பாடசாலைகளுக்கு மாத்திரம் இணைந்துக்கொள்ள அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்
அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்

இந்த ஆசிரியர்களை மாகாண சபைகளின் ஊடாக தெரிவுசெய்வதற்கான சுற்று நிருபத்ததை கல்வி அமைச்சு மாகாண சபைகளுக்கு அனுப்பி உள்ளதாகவும். இலங்கையில் எந்தவொரு பகுதியிலும் இருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் கற்பிக்க கூடிய ஓய்வுபெற்ற பட்டதாரிகள் மாகாண சபை ஊடாக இதற்கு விண்ணபிக்கலாம் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஹட்டன் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல 02 தமிழ் வித்தியாலயத்தின் வெள்ளி விழா கொணட்டாடம் ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங் பொன்னையா, மலையத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்த ஜோசப், பாடசாலையின் அதிபர், முன்னால் அதிபர்கள், அயற் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்ச மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
பாடசாலையின் பழைய மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந் நிகழ்வில், பாடசாலை சின்னம் வெயியீடு, இசையமைக்கபட்ட பாடசாலை கீதம் இருவட்டு வெளியீடு, பாடசாலையின் விவரணம் இருவட்டு வெயியீடு, முன்னாள் இன்னால் அதிபர்கள் ஆசிரியர்கள் கௌரவிப்பு, சாதனை மாணவரகள் கௌரவிப்பு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு நிகக்வுகளும் அரங்கேறின.
இங்கு தொடந்து உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர்,
இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் பல தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது. ஆனால், மலையத்தில் சில பாடசாலைகள் தற்போது தான் வெள்ளி விழா கொண்டாடிக் கொண்டு இருகின்றன. இதற்கு காரணம் எமது மலையத்தின் கல்வி 25 வருடங்கள் பின்னோக்கி இருப்பதுவே ஆகும். இதனை முறியடிக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

இதற்கு மலையத்தில் காணப்டும் புத்திஜீவிகள் சிந்தித்து சமூகத்தின்பால் செயற்பட வேண்டும். தற்போதயை அரசாங்கம் இதனை கருத்திற் கொண்டு செயற்பட்டு வருகின்றது. நான் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றவன். அதனால் தான் இந்த அமைச்சு எனக்கு கிடைத்துள்ளது. இருந்தும் எனது அமைச்சின் சேவைகள் அனைத்தும் மலையத்திற்கு மாத்திரம் மட்டுபடுத்தபட்டாக இருக்க முடியாது. நாடு முழுவதும் சேவை செய்ய வேண்டும்.

எனது அமைச்சு குறிப்பாக இலங்கையில் காணப்படும் அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பொருப்பானதாகக் காணப்படுகின்றது. இதற்காக நான் நாடு முழுவதும் சென்றுவர வேண்டி உள்ளது. இதனை சிலர் யாழ்பாணம் மற்றும் மட்டகளப்பிளா வாக்குப் பெற்றார் அங்கயே செல்கின்றார். தேர்தல் வந்ததும் அங்கு போய் வாக்கு கேக்கட்டும் என்கின்றார்கள். இது ஒரு வேடிக்ககையான விடயம்.

மலையத்தை சார்ந்த ஒருவருக்கு இவ்வாறு நாடு முழுவதும் கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்பட் கிடைத்ததற்கு மலையக மக்கள் சந்தோஷபட வேண்டும். எனக்கு இந்த அரசாங்கம் கொடுத்த அமைச்சசை முறையாகச் செயற்படுத்துவதினாலயே மலையகத்தின்பால் நான் முன் வைக்கும் நல்ல பல விடயங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைகின்றது. அதில் ஒன்றே இந்த மலையத்திற்கான கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பாடங்களுக்கான ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]