பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புப் போராட்டத்துக்கு ஆதரவாக கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வியாழக்கிழமை (25) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கையான 1,000 ரூபாயை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கவனயீர்ப்பில், நிறுவகத்திலுள்ள சகல மாணவர்களும் பங்கேற்றனர்.

இடுப்புடைய உழைப்போருக்கு உருப்படியாய்ட ஊதியம் கொடு, உழைப்பவன் தோட்டத்தொழிலாளி, பிழைப்பது முதலாளியா, தேனீரை மட்டும் குடி சம்பளத்தை வழங்காதே, காட்டைத் தோட்டமாக்கி நாட்டை நாம் சுமந்து கடைசியில் ஆனோம் தோட்டக்காட்டானாய், போராட்டம் என்பது எமக்கானது மட்டுமல்ல எமது தலைமுறையின் எதிர்கால வாழ்கைக்காக, உன் வயிற்றை நிரப்ப தொழிலாளி வயிற்றில் அடிக்காதே, சந்தா வாங்கும் தொழிற்சங்கங்களே தொழிலாளியின் சம்பளத்தை உயர்த்தப் போராடு, போன்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவண்ணம், மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பெருந்தோட்ட தொழிலாளர்களின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]