பெருந்தோட்டத்துறை மேற்பார்வையாளரினால் பாடசாலை மாணவியொருவருக்கு ஏற்பட்ட விபரீதம்

பாடசாலை மாணவியொருவரை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய பெருந்தோட்டத்துறை மேற்பார்வையாளர் ஒருவரை தெல்தெனிய பொலிஸார் கடந்த 27 ஆம்திகதி கைது செய்துள்ளனர்.

கரலியத்த மெதகம்மெத கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான சரத் ஜெயசிங்க என்பவர் கடந்த 22 ஆம் திகதி தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் பாடசாலை சென்ற தனது மகள் வீடு திரும்பாது காணாமல் போயுள்ளார் என முறைப்பாடு செய்துள்ளார்,

இதனையடுத்து வலல ரத்ணாயக்க பாடசாலையில் தரம் பத்தில் கல்வி பயின்று வந்த குறித்த 16 வயது நிரம்பிய மாணவியை தேடி வந்த நிலையில் ரங்கல பெருந்தோட்டத்துறை மேற்பார்வையாளர் ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கைது செய்தனர்.

15 வயதும் எட்டு மாதங்களையுமுடைய குறித்த மாணவியை பொலிஸார் மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் சந்தேக நபரை தெல்தெனிய நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]