முகப்பு News Local News பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இந்த மாதம்

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இந்த மாதம்

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை இந்த மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போசகரும், பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அதனை புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பில் கூட்டு  ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு என்பன மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்கு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இருந்தன.
இதன்படி சந்திப்புக்கு திகதி கோரப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 17ம் திகதி அந்த பேச்சுவார்த்தைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com