பெரிய புல்லுமலை போத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்

மட்டக்களப்பு பெரிய புல்லுமலை போத்தில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கான கட்டடத்திற்கு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை அனுமதி வழங்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாகவும் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மாணம் காரணமாகவும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் இத்திட்டத்தினை இடை நிறுத்துமாறு கேட்டு ஜனதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கு சபையின் விஷேட அமர்வில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு போது 12 பேர் ஆதரவு தெரிவித்ததுடன் ஏனைய 8 நடுநிலை வகித்தனர். இதன் அடிப்படையில ஜனாதிபதியின் பதிலுக்காக கடிதம் அனுப்புவதாக ;தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் விஷேட அமைர்வு இன்று வியாழக்கிழமை (21) தவிசாளர் நாகமணி கதிரவேல் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொரிய புல்லுமலை கிரமத்தில் போத்தலில் அடைக்கப்படும் குடிநீர் தொழிற்சாலை தொடர்பாக உறுப்பினர் மத்தியில் கருத்துக்கள் பெறப்பட்டன.

தமிழ் மக்கள் வீடதலைப்புலிகளின் கட்சியின் உறுப்பினர் வி.ஜெயகணேஸ் – செங்கலn பதுளைவீதியில் 8000 மேற்பட்ட மூவின மக்களும் வசிக்கின்றனர் இவர்கள் தொழிலாக கால்நடை வளர்ப்பு விவசாயம் மீன்பிடி போன்ற தொழில்களை ; ஜீவனோபாயமாக கொண்டுள்ளார்கள்.

அந்தப்பிரதேசத்தில் ஒரு குளத்தை அடைத்து நிலத்திற்கு கிழாக 180 மீற்றர் தூரத்திற்கு கீழாக நீரை எடுப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல இந்தப்பிரதேசத்தில் உள்ள மக்களும் கால்நடைகளும் நிலத்தடி நீரை நம்பியே வாழ்கின்றன இந்தப்பிரதேசத்தில் இருந்து நிலத்தடி நீரைப்பெற்று போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க முடியாது.

 

ஸ்ரீ லங்காh சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் எம்.எஸ் முகமது ஜவ்பர் – போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாரல தொடர்பாக இந்த ஆண்டின் முற்பகுதியில் கட்டிடம் அமைப்பதற்கான அனுமதியை மாத்திரிம் ஏறாவூர் பற்று பிரதேச சபை வளங்கியுள்ளது இதற்கு ஏனைய திணைக்களங்களும் தகுதிச்சான்றிதழ்கள் வழங்கியுள்ளன அனமதி பெற்று தொழிற்சாலை அமைக்கப்பட்ட பின் அதற்கெதிராக கிளர்ந்தெழுவதும் ஆர்ப்பாட்டங்கள் செய்து தொழிற்சாலையை தடை செய்தால் மில்லியன் கணக்கில் முதலீடு செய்து சட்டப்படி அனுமதி பெற்று தொழிற்சாலை அமைத்தவர்கள் பிரதேசசபை செயலாளருக்கு எதிராகவோ சபைக்கு சதிராகவோ வழக்க தொடர்ந்தால் வழக்கிற்கான செலவினை யார் பொறுப்பெடுப்படு செயலாளர் சபை நிதியில் இருந்தா அல்லது தனிப்பட்ட ரீதியிலா வழக்காடுவார்.

குறிப்பிட்ட கம்பணியுடன் அனுகி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சணைக்கு தீர்வு காணவேண்டும் .

இது தொடர்ப்பாக பிரதேசசபையின் செயலாளர் க.பேரின்பராஜா தெரிவிக்கையில் – 2018 ஜனவரி மாதம் கட்டிட அனுமதிக்காக விண்ணப்பம் கிடைக்கப்படட்து

இந்தக் கட்டிடத்திற்கான நீர் முகாமைத்துவ அமைச்சின் சான்றிதழ் எங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டள்ளது. அரசஅதிகாரி என்ற வகையில் கட்டிடம் அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களும்; சரியாக இருக்கும் பட்சத்தில் அனுமதி வழங்க வேண்டும் சட்டத்திற்கு கட்டப்பட்டடுத்தான் அனுமதி வழங்கியுள்ளளேன்

அமைச்சர் ஹிஸ்புல்லா கூறியா அனுமதி வழங்கினீர்கள் தொலைபேசியில் அழைத்து கேட்டார்கள் நான் எவருடைய கதையையும் கேட்க வேண்டிய அவசியம் இ;ல்லை ஆவணங்கள் சரியாக இருந்தால் கட்டிடத்திற்கான அனுமதி வழங்கமுடியும் யார் வரவேண்டம் என்னை சந்திக்கவேண்டும் என்பதை நான் பார்க்கவில்லை என்றார்.

தவிசாளர், சுயமாக இயங்காமல் உபதவிசாளர் மற்றும் செயலாளரின் கருத்துக்களுக்கு அமைள செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சி.சர்வானந்தம் குற்றம் சுமத்தினார் இதன்போது குறுக்கிட்ட தமிழ்மக்கள் விடதலைப்புலிகளின் கட்சி உறுப்பினர் நா.திருநாவுகரசு – தமிழ்தேசிய கூட்டமைப்புதான் தவிசாளர் தெரிவின்போது ந.கதிரவேலுக்கு ஆதரவு வழங்கியது தற்போது அவர் தகுதி அற்றவர் என விமர்சிக்கின்றார்கள் நீங்கள் ஆளும் கட்சி என்ற ரீதியில் பணத்தை பிரித்து நீங்களே எங்கள் வட்டாரங்களிலும் வேiலை செய்யுங்கள் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]