பெரிய புல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலைக்கெதிராக பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

பெரிய புல்லுமலை குடிநீர்த் தொழிற்சாலைக்கெதிராக பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தலில் அடிக்கப்பட்ட குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (07) மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

அரச, தனியார் நிறுவனங்களையும் பூரணமாக முடக்கி, வர்த்தக நிலையங்களைப் பூட்டி, போக்குவரத்துக்களை முடக்கி எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஹர்த்தால் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை, அரசாங்க அலுவலகங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை. வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

போக்குவரத்தில் ஈடுபட்ட பயணிகள் பஸ் வண்டிகள் மற்றும் சில வாகனங்களில் செங்கலடி பிரதேசத்தில் வைத்து கல்வீச்சு இடம்பெற்றுள்ளது. வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பினூடாக சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

கல்வீச்சில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து இளைஞர்கள் ஏறாவூர்ப் பொலிஸாரினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பெரிய புல்லுமலை பெரிய புல்லுமலை பெரிய புல்லுமலை பெரிய புல்லுமலை பெரிய புல்லுமலை பெரிய புல்லுமலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]