பெரியோர்கள் வயோதிப மடங்களில் சேர்க்கப்படும் நிலை

பெரியோர்கள் வயோதிப மடங்களில் சேர்க்கப்படும் நிலை

வயோதிப மடங்களில்

மட்டக்களப்பு விருந்தோம்பலுக்கு சிறப்பு பெற்றது கூட்டுக் குடும்பமாக வாழும் பண்பாட்டினையும் மூத்தோரை கனம் பண்ணும் பண்புகளைக் கொண்டதாக காணப்பட்ட போதிலும் காலத்தின் மாற்றம் காரணமாக கூட்டுக் குடும்பங்களில் இருந்த பெரியோர்களை வயோதிப மடங்களில் சேர்க்கப்படும் நிலையினை நாங்கள் பார்க்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச கலாசாரவிழா மயிலம்பாவெளி கருணாலயம் மண்டபத்தில் திங்கட்கிழமை (04) நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ந.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தொடரந்து உரையாற்றுகையில் – “ஒரு பிரதேசத்தில் இருக்கின்ற கலை, கலாசார பண்பாட்டு விழிமியங்கள் பேணிப்பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை அவை ஆவணப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. நானிலம் என்ற நூல் வெளியிடும் முயற்சியானது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு ஆவணமாக இருக்கும். தமிழனுடைய கலையும் காலாசாரமும் என்றும் வாழும் என்பதற்கு கலாசார நிகழ்வுகள் அவசியமாக உள்ளன.

நாடகங்கள் என்பது வெறுமனே மேடைகளில் உருவாக்குவது மட்டுமல்ல ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தி ஒரு மனிதனின் உளவள அபிவிருத்தியில் தங்கியுள்ளது. இதனூடாக ஏனைய பிரதேசத்தின் கல்வி பொருளாதாரம் என்பவற்றில் பாரிய மாற்றம் ஏற்படும் அது போன்று காலாசாரம் என்பது மனிதனை உளவளபப்டுத்தி அவனுடைய மனதினை சரியான வழியில் கொண்டு சென்று ஏனைய இளைஞர்களை வழிப்படுத்தும் ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது.

மாவட்டத்தில் பல்லின இனக் குழுக்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு பிரதேசத்திலும் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன அதிலம் குறிப்பாக ஏறாவூர்ப்பற்று பிரதேசம் தொடர்தேர்ச்சியாக நல்ல அடைவினைக் கொண்டுள்ளது.

கலை என்பது மாத்திரம் அல்லாது கலை கலாசார விழிமியங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை எமக்கு உள்ளது. எமது மக்கள் இடம்பெயர்ந்து மேற்கத்தேய நாடுகளில் கூடுதலாக வாழ்கின்றார்கள். அவர்கள் மொழி காலாசாரத்தை வளர்ப்பதற்கு பாரிய பங்காகற்றுகிறார்கள். அவர்கள் தொலைத்த மொழிவளத்தினைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் விருந்தோம்பலுக்கு சிறப்பு பெற்றது அது போன்று கூட்டுக் குடும்பமாக வாழும் பண்பாட்டினைக் கொண்டது. உணவுப் பழக்க வாழக்கங்கள் தனியாக உள்ளன. மூத்தோரை கனம் பண்ணுதல் சட்டத்தை எற்று நடத்தல் வாழும்போது மனிதர்களை வாழ்த்துதல் போன்ற பண்புகளைக் கொண்ட சமூகமாக நாங்கள் வாழ்ந்து வந்துள்ளோம்.

காலத்தின் மாற்றம் காரணமாக கூட்டுக் குடும்பங்களில் இருந்த பெரியோர்கள் வயோதிப மடங்களில் சேர்க்கப்படும் நிலையினை நாங்கள் பார்க்கின்றோம். இவ்வாறான நிகழ்வுகள் ஊடாக எங்களுடைய பழைய பழக்க வழக்கங்களை அடுத்த சந்ததினருக்கு கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.

வயோதிப மடங்களில்வயோதிப மடங்களில்வயோதிப மடங்களில்வயோதிப மடங்களில்வயோதிப மடங்களில்வயோதிப மடங்களில்வயோதிப மடங்களில்வயோதிப மடங்களில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]