பெரட்டாசி தோட்டத்திற்குச் செல்லும் 15 கி.மீ பாதை மோசமான நிலையில் : மறுசீரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கண்டி நுவரெலியா பிரதான பாதையில் இருந்து பெரட்டாசி தோட்டத்திற்குச் செல்லும் 15 கி.மீ பாதை சுமார் 15 வருடங்களுக்கு மேல் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை. இதனால் இந்த பிரதேசத்தில் வாழும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் பெரட்டாசி, கரகஸ்தலாவ, எல்பொட போன்ற கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த ரஸ்புருக் தோட்டம், பெரட்டாசி தோட்டம், பூச்சிகொடத் தோட்டம், பெரட்டாசி தொழிற்சலைப் பிரிவுத் தோட்டம், மேரியல் தோட்டம், அயரி தோட்டம், எல்பொட வடக்கு தோட்டம், மேமொழித் தோட்டம், காச்சாமலைத் தோட்டம், கட்டகித்துல தோட்டம், வெதமுள்ள கெமினிதன் தோட்டம், கந்தலா போன்ற தோட்டங்கள் காணப்படுகின்றன.
சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இந்தப் பாதையில் அரச போக்குவரத்து சேவை இருந்தது அதுவும் பாதை அவலம் காரணமாக இடை நிறுத்தபட்டுள்ளது. இப்பிரதேசத்தில் காணப்படும் 8 பாடசாலைகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள் பஸ் உரிய நேரத்திற்குச் செல்லாததால் காலை 9 மணிக்கே பாடசாலை செல்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நிலையும் பாதித்து வருகின்றது.

தற்போது 9 தோட்டங்களுக்கும் பொதுவாக ஒரு வைத்தியசாலை காணப்படுகின்றது. இங்கும் ஒரு வைத்தியரே காணப்படுகின்றார். இந்த வைத்தியசாலையில் இருந்நு அவசர தேவை ஏற்படும் போது நோயாளர்களை தோட்ட லொறிகள் மூலமாகவே புஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும் வைத்திசாலைக்கு அனுப்பபடுகின்றனர். அம்புலன்ஸ் வசதியும் இல்லை.

சிலர் முச்சக்கர வண்டிகளில் செல்கின்றனர். பாதையோ குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. லொறியிலும் முச்சக்கர வண்டியிலும் செல்லும் போது குழந்தைகள் பாதையிலேயே கிடைத்தும் உள்ளது. சிலர் தகுந்த நேரத்தில் வைத்தியசாலைக்கு சேர்க்கப்படாத“õல் பாதையிலேயே இறந்தும் உள்ளனர்.

இந்தப் பாதையின் ஒரு பகுதி முன்னைய அரசின் காலத்தில் 3 கிமீ திருத்தபட்டது. அரசு மாற்றத்தின் பின்னர் இந்த வேலைதிட்டம் தொடர்ந்து முன்னெடுக்கபடவில்லை. தற்போது இந்த பாதையை தோட்ட நிறுவாகங்கள் மண் உட்பட புற்களை போட்டு செப்பனிட்டு வருகின்றது. இதனால் மழைக் காலங்களில் பாதை மிகவும் பாதிக்கபட்டு சேறாக காணப்படுகின்றது.

பாதை அவலம் காரணமாக பலமுறை பல விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்தப் பாதையை உடனடியாக திருத்தி தறுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பாதையை செய்து தருவதாக மலையகத்தின் அரசியல் தலைமைகள் காலத்திற்கு காலம் தேர்தல் நேரங்களில் வாக்குறுதியளித்தாலும் அவை நடைமுறைபடுத்துவதாக தெரியவில்லை. தேர்தல் காலங்களில் சென்றவர்களில் ஒரு சிலரை தவிர பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மீண்டும் அந்த பக்கம் வருவதேயில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]