பெயரின் முதல் எழுத்தை வைத்து, உங்களை பற்றிய இரகசியங்கள் அறிவது எப்படி?

ஒரு பொருளின் ஒரு உயிரின் அடையாளமாக இருப்பது பெயர் தான். பெயர் தான் உங்களைப் பற்றிய முன் அபிப்ராயங்களை மற்றவர்களுக்கு கடத்தும் முதல் கருவியாக இருக்கிறது. பிறந்த தேதியை வைத்து, ராசிப்படி, ஜாதகப்படி, என விதவிதமாக அடையாளப் பெயர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்.

உங்களை புது இடத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது உங்களின் பெயரைக்கொண்டே உங்களைப் பற்றிய மதிப்பீடு துவங்கிடும். உங்களைப்பற்றி பிறர் தெரிந்து கொள்ளவும், பிறரைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

A,B,C,D :

A:A உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் உங்களின் துணிவு, நேர்மையால் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

B: நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள்.

C:உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். உங்களுக்கு பேச்சாற்றல் அதிகம்.

D:உங்களுக்கு அதிகமான மனோதிடம் இருக்கும். சுயதொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் உங்களிடம் பிறருக்கு உதவிடும் குணம் அதிகமிருக்கும்.

E,F,G,H.

E:உங்களுக்கு பிறரிடம் பேசுவதில் சிரமம் இருக்காது. எளிதாக பிறரை கவந்து விடுவீர்கள். இன்னொருவரின் கீழ் அடிமையாக இருப்பதை எப்போதும் விரும்ப மாட்டீர்கள். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் காதலில் நம்பிக்கை இருக்காது.

F: உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகவும் விளங்குவீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள்.

G: வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.

H:இந்த எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள். பணம் மற்றும் சொத்துக்களை சேர்ப்பதில் உங்களுக்கு ஆர்வம் அதிகம்.

I,J,K,L.

I:தன்னம்பிக்கையும் அழகும் நிறந்தவராக விளங்குவீர்கள். க்ரியேட்டிவாக பணியாற்றுவது உங்களுக்கு மிகவும் பிடித்த துறையாக இருக்கும்.

J:உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், தொடர்ந்து போராடுவீர்கள்.

K:ஒளிவு மறைவுடன் இருக்க விரும்புபவர் நீங்கள். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்படுவீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு உங்களை தயார்படுத்திக் கொள்வீர்கள். எதையாவது நினைத்து ஓடிக்கொண்டேயிருப்பது உங்களுக்கு வாடிக்கை.

L: வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல துடிப்பீர்கள். உங்களுக்கு யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு குடும்பம் பக்கபலமாக இருக்கும்.

M,N,O,P.

M: M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். நீங்கள் ஒளிமறைவின்றி இருக்கவே விரும்புவீர்கள். உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். எந்த சூழ்நிலைகளிலும் சிறந்த அறிவுரை வழங்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும்.

N:உங்களின் துடிப்பு ,தொடர்முயற்சி முயற்சி மற்றும் அசராத உழைப்பு உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.

O: O என்ற எழுத்து அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஆர்வத்துடன் இருப்பீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.

P: உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராகவும் இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

Q,R,S,T.

Q: Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். பழைய ட்ரெண்டை பின்பற்றுவதை உங்களுக்கு பிடிக்காது.

R:அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் நீங்கள் பதட்டமில்லாமல் அமைதியுடன் வாழ விரும்புவீர்கள்.

S:உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிது புதிதாக யோசித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திடுவீர்கள். எப்போதும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள் அதே போல் உங்களால் காதலில் விழாமலும் இருக்க முடியாது.

T: எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் உடனேயே சோர்ந்துவிடுவீர்கள்.


U,V,W.

U: அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் எதையும் ஒழுங்காக நேர்த்தியாக இருப்பது உங்களுக்கு பிடிக்காது. எப்போதும் புதுப்புது சோதனைகளில் ஈடுபடுவது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

V: மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.

W: W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். உங்களை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம். ரகசியங்களை காப்பீர்கள். எதையும் ஒளிமறைவின்றி வைத்திருக்க விரும்புவீர்கள் இதனாலேயே பல சங்கடங்களையும் சந்திர்ப்பீர்கள்.

X,Y,Z.

X: சொகுசான வாழ்க்கையையே விரும்புவீர்கள். இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ள உங்களிடத்தில் நட்பு வட்டாரம் குறைவாகத்தான் இருக்கும்.

Y: Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்கவராக இருப்பீர்கள் . எந்த வேலையையும் திட்டமிட்டு செய்வதில் நீங்கள் சிறந்தவராக விளங்குவீர்கள்.அடிக்கடி கோபம் வரும்.

Z:மனதளவில் மிகுந்த தைரியசாலியாக இருப்பீர்கள் ஆனால் அதனை வெளிக்காட்டிக்கொள்ள தயக்கம் இருக்கும். பிறருக்கு தன்னம்பிக்கை அளித்து ஆலோசனை வழங்குவதில் எப்போதும் முனைப்புடன் இருப்பீர்கள் எல்லாரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புவீர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]