பெப்ரவரி 10ஆம் திகதி பின்னரே தபால் வாக்குகள் எண்ணப்படும்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக தபால்மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் பெப்ரவரி 10ஆம் திகதி வாக்குப்பதிவுகள் நிறைவுபெற்ற பின்னரே எண்ணப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புள்ளடி இடப்பட்ட தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பொதிகள் பெப்ரவரி 9ஆம் திகதி சிரேஷ்ட தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும்.

பெப்ரவரி 10ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வாக்குப்பதிவு பூர்த்தியான பின்னரே பொதிகள் திறக்கப்பட்டு எண்ணப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.