பெண் விரிவுரையாளர் மரணத்திற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது

திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்பவிப்பதற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் நீரில் மூழ்கியமையால் இடம்பெற்ற மூச்சுதிணறனாலேயே இம் மரணம் சம்பவித்தமை என்பது தெரியவந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று முன்தினம் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]