முகப்பு News Local News பெண் மற்றும் மகன் மீது தாக்குதல்

பெண் மற்றும் மகன் மீது தாக்குதல்

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்திற்கு அருகில் வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை முற்பகல் குறித்ததாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டைசங்கரத்தை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய குடும்ப பெண்ணும், அவரது ஆறு வயது மகன்மீதுமே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த குடும்ப பெண் நேற்றையதினம் தனது ஆறு வயது மகனுடன் வட்டுக்கோட்டை – கோட்டைக்காடு வைத்தியசாலைக்கு சாதாரணசிகிச்சைக்கு சென்று வீடு திரும்பும் போதே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாதகும்பல் அவர்களை வழி மறித்து இரும்பு கம்பிகள் உள்ளிட்டவையால் தலையில் தாக்கிஉள்ளனர். குறித்த தாக்குதலில் குடும்ப பெண் தலையில் படுகாயமடைந்த நிலையில் மயங்கிவிழுந்துள்ளார்.

அதேவேளை அவரது ஆறு வயதுமகன் மீதும் தாக்குதல் மேற்கொண்டதில் மகனும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இருவர் மீதும்தாக்குதல் மேற்கொண்ட தாக்குதலாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் வீதியால்வந்தவர்கள் மயக்கமடைந்திருந்த குடும்ப பெண்ணையும் காயங்களுக்கு உள்ளான அவரதுமகனையும் மீட்டு கோட்டைக்காடு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த குடும்ப பெண்மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குசிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த 1996ஆம் ஆண்டுநாவற்குழி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 24 இளைஞர்கள் காணமல் ஆக்கப்பட்டனர்.

அது தொடர்பில் யாழ்.மேல்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பிலான வழக்கு விசாரணைநடைபெற்று வருகின்றது.

குறித்த வழக்கில்முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு உதவியாளராக குறித்த பெண் செயற்பட்டு வருகின்றார்என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com