யாழில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட பெண் பொலிஸ் அதிகாரிக்கு வீடொன்று அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது

பெண் பொலிஸ் அதிகாரி

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட ‘பெண் பொலிஸ் அதிகாரி’க்கு ஒருவருக்கு வீடமைத்து வழங்குவதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடயவியல் பிரிவில் கடமையாற்றும் ஜனனி என்னும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு, வீடு ஒன்றை நிர்மாணித்து வழங்குவதற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் உள்ள 14 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளின் நிதிப்பங்களிப்புடன், ரூபா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வீடு ஒன்று அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

இதன்படி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள பெண் பொலிஸ் உத்தியோருக்கு சொந்தமான காணியில் பதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் வைபம் இன்று காலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்குமாகாண பிரதிப்பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார். இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோ, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள 14 பொலிஸ் நிலையங்களின் அத்தியட்சகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பெண் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் அதிகாரி பெண் பொலிஸ் அதிகாரி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]