பெண் நிருபரிடம் மன்னிப்புக் கோரிய தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றைய தினம் கவர்னர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பு முடிவடைந்த பின், அவரிடம் சில பெண் நிருபர்கள் கேள்விகளை கேட்க முயன்றனர்.  அப்போது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காத ஆளுநர் அங்கு நின்றிருந்த பெண் நிருபரின் கன்னத்தை சிரித்தபடி, கையால் தட்டிவிட்டு சென்றார்.

தமிழக ஆளுநர்

இந்தச் செயலைக் கண்டித்த அந்த பெண் நிருபர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டார். அதில், ‘கவர்னர் தன்னை தாத்தாவாக நினைத்து என் கன்னத்தை தட்டி இருக்கலாம். ஆனால் நான் இதை ஏற்கவில்லை. என் முகத்தை நான் பலமுறை கழுவினால் கூட இந்த தாக்கத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. அவர் செய்தது தவறு’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

கவர்னரின் இந்தச் செயலுக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் கண்டனத்தை தெரிவித்ததையடுத்து இவ்விடயம் சர்ச்சையாக கிளம்பியது.

இவ் சர்ச்சையான சூழ்நிலையை அறிந்த ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்.