பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தோட்ட மூன்றாம் இலக்க தொடர் வீட்டு பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்றை பொகவந்தலாவை பொலிஸார் 08.11.2017 அன்று காலை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் பழனியான்டி சின்னம்மா 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதால் சடலம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் காணப்படுவதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு சடலம் தொடர்பில் அட்டன் நீதிமன்ற நீதவான் மரண விசாரணையை நேரில் வருகைதந்து மேற்கொண்டதன் பின்னர் சட்டவைத்திய பிரேத பரிசோதணைக்காக சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]