பெண்ணைத் தாக்கியமை பற்றிய முறைப்பாட்டில் இளைஞர் கைது

பெண்ணைத் தாக்கியமை

பெண்ணைத் தாக்கியமை பற்றிய முறைப்பாட்டில் இளைஞர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் மிச்நகர் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பிலுள்ள பொதுப் பட்டியல் வேட்பாளரான பெண்ணொருவரைத் தாக்கியதான முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் பொருட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மாற்றுக் கட்சியொன்றின் ஆதரவாளரான இளைஞர் ஒருவர் பெண்ணொருவரைத் தாக்கியுள்ளதாகவும் முறைப்பாட்டாளரான பொதுப் பட்டியல் பெண் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு (04.02.2018) சந்தேக நபரான 20 வயதுடைய இளைஞனைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட பெண் பொதுப்பட்டியல் வேட்பாளர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]