பெண்ணின் சடலம் மீட்பு

பெண்ணின் சடலம்

தோட்டக் குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் ஒருவரின் சடலத்தை, எல்ல பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

எல்ல பகுதியின் இந்தகல தோட்டதைச் சேர்ந்த ஜி.பி.ஏ. தயாவதி என்ற 72 வயது நிரம்பிய வயோதிபப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இப்பெண் அக்குடியிருப்பில் தனிமையில் வாழ்ந்து வந்ததாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இம் மரணம் மர்மம் நிறைந்திருப்பதாக தெரிவித்த எல்ல பொலிஸார், இது தொடர்பாக தீவிர புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]