முகப்பு News Local News பெண்ணின் சடலம் மீட்பு

பெண்ணின் சடலம் மீட்பு

நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட பகுதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவ இடத்துக்கு ஹட்டன் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ராமமூர்த்தி வருகை தந்ததை அடுத்து, சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முன்னதாக, பொகவந்தலாவை – நோர்வூட் பிரதான வீதியின் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கால்வாய் ஒன்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இன்று காலை 08 மணியளவில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்ட மக்கள் தொழிலுக்கு சென்ற நிலையில், கால்வாயில் சடலமொன்று இருபப்தை அவதானித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com