பெண்களுக்கான ‘குடி’யுரிமை மீண்டும் பறிக்கப்பட்டது

பெண்கள் மது உற்பத்தி மற்றும் விற்பனை கூடங்களில் பணியாற்றவும், மது வகைகளை வாங்கவும் கடந்த 1979-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நாட்டின் சில இடங்களில் உள்ள மதுக் கூடங்களில் அரசின் உத்தரவை மீறிய வகையில் பெண்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.பெண்கள் மது

இந்நிலையில், சுமார் 38 ஆண்டுகாலம் நடைமுறையில் இருந்த இந்த தடையை ரத்துசெய்து அமைச்சர் மங்கள சமரவீரா உத்தரவு பிறப்பித்துள்ளார். மெலும் பெண்கள் மதுபான கடைகளுக்கு செல்ல தடை என இருந்த சட்டத்தையும் ரத்து செய்தார்.

Maithripala Sirisena

இதனிடையே இலங்கையில் பெண்களுக்கு மதுபானம் விற்க மீண்டும் தடை விதிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

பௌத்த துறவிகள் தடையை நீக்குவதற்கான முடிவை விமர்சித்துள்ளனர், இது கலாசார சீரழிவிற்க்கு வழிவகுக்கும் என அவர்கள் வாதிட்டனர், இதனாலேயே தடை மீண்டும் அமுலுக்கு வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]