பெண்கள் பேசும் சில அபாயகரமான பொய்கள்!

பெண்களின் மனதின் ஆழத்தை யாராலும் அறிய முடியாது என்று சொல்வார்கள். அதே போல் பெண்கள் பேசும் வார்த்தைகளையும் புரிந்து கொள்வது கடினம். அவர்கள் எதையும் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள். பெண்கள் பேசும் வார்த்தைகளின் அர்த்தம் அறிய ஒரு தனி டிஸ்னரி தான் வைக்க வேண்டும்.

இதோ பெண்கள் சொல்லும் சில பொதுவான பொய்களுக்கு இடையே உள்ள மிகப்பெரிய உண்மைகள் உங்களுக்காக….

உண்மையான கருத்து பெண்கள் என்னை பற்றிய உங்களது உண்மையான கருத்து என்ன என்று கேட்டால், அதற்கு அர்த்தம் நான் என்ன உன்னிடம் இருந்து கேட்க விரும்புகிறேனோ அதை சொல்ல வேண்டும் என்று அர்த்தம். நீங்கள் உண்மையான கருத்தை சொல்கிறேன் என்று, லிப்ஸ்டிக் ரொம்ப அசிங்கமா இருக்கு.. புடவை கலர் நல்லா இல்ல… நீ குண்ட இருக்க என்று எல்லாம் சொல்லிவிட கூடாது.

நான் உண்மையா சந்தோஷமா இருக்க இவ்வாறு பெண்கள் சொன்னால் அவர்களுக்கும் சந்தோஷத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்து ஒகே அல்லது குட் என்று சொல்வதை விட மோசமான விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாது. அவர்களது பிரச்சனைக்கு காரணமான விஷயத்தை கண்டறிந்து அதிலிருந்து அவர்களை சமாதானம் செய்து மீட்பது எப்படி என்பதை பற்றி ஆராய வேண்டும்.

நீ உன் பிரண்ட்ஸ் கூட பார்ட்டிக்கு போ பார்ட்டிக்கு போக நீங்கள் அவரிடம் அனுமதி கேட்கும் போது அவர் நீ உன் பிரண்ட்ஸ் கூட போ என்று சொல்லிவிட்டால், உடனே பறந்து விடாதீர்கள். என்னையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்பதை இப்படி கூட பெண்கள் சொல்வார்கள்.

எனக்கு எதுவும் வேண்டாம் பெண்கள் தங்களுக்கு எதுவும் வேண்டாம் சொன்னால், சரி உண்மையாகவே எதுவும் வேண்டாம் போல் இருக்கிறது என விட்டுவிட கூடாது. அவர்களுக்கு பிடித்தது கிடைக்கவில்லை. பிடித்தது தான் வேண்டும் என்பது தான் இதன் அர்த்தம்.


நான் இனிமேல் உன்ன ஏமாற்ற மாட்டேன் பெண்கள் இனிமேல் உன்னை ஏமாற்றமாட்டேன் என்று கூறினால், இதுவரை ஏதோ ஒரு விஷயத்தில் உங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் என்று அர்த்தம் ஆகும். இந்த வார்த்தைகள் சூழ்நிலைகள் மற்றும் முக அசைவுகள் பொறுத்து மாறுபடலாம். எனவே வார்த்தையோடு சேர்த்து அவர்களது தோரணைகளையும் கவனிக்க வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]