பெண்கள் நெற்றியில் இந்த இடத்தில் பொட்டு வைத்தால் பாலியல் உணர்வுகள் தூண்டப்படுமாம்!

நம் முன்னோர்கள் பல சடங்கு முறைகள் ஒவ்வொன்றிலும் அறிவியல் உள்ளது. இது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்பது வழமை. அதாவது இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நம் உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் உள்ளது.

அதை தொட்டு தூண்டும் பொருட்டும் அங்கே உருவாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் பொருட்டும் ஆண் பெண் எல்லோரும் போட்டு வைப்போம். இது எல்லோரும் கடைபிடிக்கும் சம்பிரதாய முறை ஆனால் திருமணமான பெண்கள் திருமணத்திற்கு பிறகு இரண்டாவதாக ஒரு பொட்டு வைப்பார்கள் அதுதான் வகுடு.

இந்த இடத்தில் தினமும் பெண்கள் தொட்டு பொட்டு வைப்பதால் அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. சில சுரப்பிகள் தூண்டப்படுகிறது பெண்களுக்கு நெற்றி வகுடில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு அடிவயிற்றில் பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதேபோல் கர்ப்பப்பையும் வலுப்பெறுகிறது. திருமணத்திற்கு பின் பெண்களுக்கு உடலுறவில் நல்ல ஆர்வம் ஏற்படவும், கருப்பை வலுப்பெற வேண்டும் என்பதற்காகத் தான் நெற்றியில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

மேலும் சீமந்தம் 5 அல்லது 7 ஆவது மாதம் வளைகாப்பு செய்யும் போது எல்லோரையும் கூப்பிட்டு நெற்றியில் பொட்டு வைத்து தொட்டு ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை வலுபெறுகிறது. வலுப்பெற்றால் குறைப்பிரசவம் உண்டாகாது. நிறைமாதமாக இருக்கும்போது சுகப்பிரசவம் ஏற்படும். ஆனால் கணவனை இழந்துவிட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டப்படாமல் இருப்பதற்காக கணவரை இழந்த பெண்கள் நெற்றி வகுடில் உள்ள பொட்டை வைக்க கூடாது என கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]