பெண்கள் எப்போதெல்லாம் அந்தவிடயத்தில் தூண்டப்படுகின்றனர்?

ஆண்களுக்கு மட்டும் தான் எல்லா நேரத்திலும் உடலுறவில் ஈடுபட ஆசை வருமா? பெண்களுக்கு அப்படி எண்ணங்கள் மனதில் எழவே எழாதா என்ற கேள்விகள் பலரது மனதில் எழலாம். அவர்களுக்கும் ஆசைகள் இருக்கின்றன தான்.

ஆனால், அவை ஆண்களுக்கு ஏற்படுவது போன்ற நிலைகளில் உண்டாவது இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் வளர்ந்த சூழல், கலாச்சாரம், சமூகம் போன்ற பல விஷயங்கள் அவர்களுடைய ஆசையில் தாக்கத்தை வெவ்வேறு மாதிரியானதாக உண்டாக்கும்…

உலகளவில் கூறப்பட்டுள்ள சில தியரிகளில் 8000 வரை தாம்பத்தியம் சார்ந்த எண்ணம் உண்டாகும் என கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் மூடநம்பிக்கை. ஆண்களுக்கு 36 முறையும், பெண்களுக்கு 18 முறையும் சராசரியாக ஒருநாளுக்கு தாம்பத்தியம் சார்ந்த எண்ணங்கள் எழுமாம்.

ஆண்களை பொறுத்தவரை செக்ஸில் ஈடுபடுவது கேசுவலான விஷயமாக இருக்கிறது. ஆனால், பெண்களால் எமோஷனலாக இணையாமல் செக்ஸில் ஈடுபட முடியாது.

வளர்ந்த கலாச்சாரம், சமூக வட்டம் மற்றும் உடல் ரீதியான பல காரணங்களால் பெண்களின் செக்ஸ் சார்ந்த எண்ணங்கள் வேறுபாடும்.

எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஈர்ப்பு காரணியும், ஒரே அளவிலான எண்ணங்களும் உண்டாகிறது. அவரவருக்கு அந்தந்த நேரம் அதுவாக அமையும் போது தான் எல்லாம் உண்டாகும்.

மேலும், அந்த ஆணின் குணாதிசயங்களால் ஈர்க்கப்படாமல், விருப்பம் ஏற்படாமல் போனால், அது போன்ற எண்ணங்கள் அவர் மீது வரவே வராது.

சிக்ஸ் பேக் பாடி தான் வேண்டும் என்றில்லை. பெண்களை பொறுத்தவரை உடல் அமைப்பு இரண்டாம் பட்சம் தான். உணர்வு ரீதியாக ஆணால் ஈர்க்கப்பட வேண்டும். அரவணைப்பு இருக்க வேண்டும் என்று தான் பெண்கள் விரும்புகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]