பெண்களை நியமிக்குமாறு கோரிக்கை

காணாமல் போனோர் அலுவலகத்தில் விசாரணை நடவடிக்கைகளுக்காக பெண்களும் நியமிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள சில சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

அத்துடன்;, இது தொடர்பிலான கோரிக்கை அடங்கிய மகஜரொன்றும், கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய சந்திப்பு திருகோணமலையில் இன்று இடம்பெற்றபோது, குறித்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணாமல்போனோருக்கான அலுவலகங்கள் திறக்கப்படவேண்டும், காணாமல் போனோர்களின் தகவல்களை உரிய குடும்பங்களுக்கு அரசாங்கம் பெற்றுத் தரவேண்டும்,

தடுப்புக் காவலில் உள்ளவர்களை விசாரணை செய்து துரிதமாக விடுதலை செய்யவேண்டும், வழக்கு தொடர்ந்தால் சட்டரீதியான ஆலோசணைகளையும் வழக்கு விவரங்களையும் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்,

காணாமல் போனோர் அலுவலகத்தில் கடமைகளுக்காக விசாரணை செய்யும் அலுவலர்களாக பெண்கள் நியமிக்கப்படவேண்டும் இழப்பீட்டு முறைகள் தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்,

காணாமல் போனோர்களுக்கான குடும்பங்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் அந்த மகஜரில் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் காலை 10 மணிக்கு குறித்த சந்திப்பு ஆரம்பமானது.

இந்த நிலையில், அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக, திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]