பெண்களே! உங்கள் கூந்தல் உங்களை பற்றி சொல்லும் என்பது தெரியுமா?

ஒரு பெண்ணின் கூத்தலை வைத்து அவரின் குணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியுமாம்.

நம் முன்னோர்கள் சாமுத்திரிகா லட்சணங்கள், அங்க இலக்கணங்கள் மூலமாகவே ஒருவரது குணத்தைச் சொல்லிவிடுவார்கள்.

வித்யாதரன்சாமுத்திரிகா லட்சணத்தில் முக்கியமான இடத்தை வகிப்பது முகம். ‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்’ என்பார்கள். அந்த முகம் எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் கேசம் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது.

சுருள் சுருளான தலைமுடி
பெண்களில் சிலருக்குச் சுருண்ட கேசம், நெளிநெளியாக அமைந்திருக்கும். கேசம் செழுமையாக இருந்தால், வாழ்வும் செழிப்பாகவே இருக்கும். இந்த மாதிரியான பெண்களின் உடல் உறுப்புகள் இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் நல்ல வலிமையுடன் இருக்கும்.

சாத்வீகமான எண்ணங்களுடன் குளிர்ச்சியான பொருள்களான வெள்ளரி, இளநீர் லஸ்ஸி போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். நீதி நேர்மை நியாயம் தவறமாட்டார்கள். அவ்வளவு எளிதில் எதற்கும் சரிசொல்லமாட்டார்கள். விழிப்பு உணர்வு மிக்கவர்கள். நம்பியவர்கள் யாராவது இவர்களுக்குத் துரோகம் செய்தால், அதைப்போல் நான்கு மடங்கு துரோகம் செய்து எதிராளியை வீழ்த்திப் போட்டுவிடுவார்கள்.

கோரைமுடி
கேசம் கோரை புற்களைப் போல் சிலருக்கு இருக்கும். இவர்கள் எதற்கும் அதிகம் பேராசைப்பட மாட்டார்கள். இருப்பதை வைத்துக் கொண்டு, ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்ற வாழ்வாங்கு வாழ்வார்கள்.

இவர்கள் தங்களது திருமணத்தின்போது சாதாரணமான எளிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திருமணத்துக்குப் பிறகு படிப்படியாக உயர்ந்து மிகப்பெரிய செல்வ நிலையை அடைவார்கள். பொது உலக விஷயங்கள், சமூகம் சார்ந்த காரியங்கள், உலக அறிவு போன்றவற்றில் இவர்களுக்கு நாட்டம் குறைவாகவே இருக்கும்.

கட்டை கட்டையான முரட்டுகேசம்
சில பெண்களுக்குக் கட்டை கட்டையான மொத்த மொத்தமாக கேசம் அமைந்திருக்கும். மற்றவர்களைப் போல நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், அத்தகைய வாழ்க்கை அமையாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். காதல் கசப்பாக முடியும். ஒரு சிலரை ஆண்கள் ஏமாற்றிவிடுவதும் உண்டு.

மணவாழ்க்கையைத் தேர்வு செய்யும்போது கவனமாகத் தேர்வு செய்வது நல்லது.. பெரும்பாலானவர்கள் தங்களின் காதலை நினைத்து நினைத்து மனதுக்குள்ளேயே வேதனைப்படுவார்கள். வைராக்கியம், பிடிவாதம், கோபம் ஆகியவை இவர்களின் உடன் பிறந்தவையாக இருக்கும். வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு வாழ்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மென்மையான கூந்தல்
கூந்தல் மென்மையாகவும் மிருதுவாகவும் அமையப்பெற்ற பெண்கள் புத்திசாலிகளாகவும் ஒழுக்க சீலர்களாகவும் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள். வார கடைசியென்றால் கோயில் குளமென கிளம்பி விடுவார்கள். அடிக்கடி கடுமையான விரதங்களை இருப்பார்கள்.

ஏழ்மை நிலையில் இருந்தாலும், தங்கள் பக்தியாலேயே வாழ்க்கையின் உன்னதமான நிலையை அடைவார்கள். புகுந்த வீட்டை விட, பிறந்த வீட்டை அதிகம் நேசிப்பார்கள். இவர்கள் யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள். அவர்களுடைய அம்மா சொன்னால் போதும் மறுபேச்சில்லாமல் அப்படியே கேட்பார்கள். கணவன் மீது உயிரையே வைத்திருப்பார்கள். எப்பேர்ப்பட்ட பிடிவாதமும் வலிமையும்மிக்க ஆடவரும், இவர்கள் மனைவியாக அமைந்துவிட்டால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்கள். மனைவிசொல்லே மந்திரமாகக் கொண்டு வாழ்வார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]