பெண்களும் நியமிக்கப்படுவார்கள் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மகளிர் விவகார திட்டமிடல் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக பிரதேச செயலக மட்டங்களில் பெண்கள் அபிவிருத்தி உதவியாளராக நியமிக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற  அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம், அரச கொள்கை என்பன பற்றி அரசாங்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் இதனை ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறு வர்த்தக அபிவிருத்தியின் போது பெண்களுக்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் பற்றி கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அபிவிருத்திப் பணிகளுக்காக தனியார் முதலீடுகளை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவற்றுடன், பிரதேச மட்டத்திலான சிறு வர்த்தகங்களை மேம்படுத்துவது பற்றியும் கவனம் செலுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]