பெண்களுக்கு 50 வயதுக்கு பிறகு ‘செக்ஸ்’ அவசியம்:நீதிமன்ற உத்தரவு

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர் மரியா ஜிவோன் கார்வல்கோ மொராய்ஸ் (72). 1995-ம் ஆண்டு 50-வது வயதில் அவரது பிறப்பு உறுப்பில் ஆபரேசன் நடந்தது.

அப்போது நடந்த தவறான ஆபரேசனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவரால் ‘செக்ஸ்’சில் ஈடுபட முடியவில்லை. அதை தொடர்ந்து அவர் தனக்கு நடந்த தவறான ஆபரேசன் குறித்து போர்ச்சுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

பெண்களுக்கு 50 வயதுக்கு

எனவே 2013-ம் ஆண்டில் தனக்கு ஆபரேசன் செய்த ஆஸ்பத்திரி மீது நஷ்டஈடு கேட்டு மொராயிஸ் போர்ச்சுகல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஆஸ்பத்திரி ரூ.90 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

பெண்களுக்கு 50 வயதுக்கு

அதை எதிர்த்து ஆஸ்பத்திரி தரப்பில் போர்ச்சுக்கல் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதை விசாரித்த கோர்ட்டு நஷ்டஈடு தொகையை மூன்றில் ஒரு பங்கை குறைத்துவிட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட மொராயிஸ் தற்போது 2 இளைஞர்களுக்கு தாயாக இருக்கிறார். பொதுவாக 50 வயதுக்கு பிறகு பெண்களுக்கு ‘செக்ஸ்’ தேவையில்லை என தீர்ப்பளித்தது.

பெண்களுக்கு 50 வயதுக்கு

அதை எதிர்த்து பிரான்சில் உள்ள ஐரோப்பிய யூனியனின் மனித உரிமைகள் கோர்ட்டில் மொராயிஸ் மேல் முறையீடு (அப்பீல்) செய்தார். அதை விசாரித்த கோர்ட்டு பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபட வயது வரம்பு இல்லை. 50 வயதுக்கு பிறகு பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபடுவது அவசியம் என தீர்ப்பு கூறியது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]