பெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்!…

ஒரு பெண்ணிடம் அவரது வயதை கேட்பதை காட்டிலும், அவரது உடல் எடை கேட்பது தான் பெரிய சிக்கலையும், கோபத்தையும்  எற்படுத்தும் என கூறுகிறார்கள்.

இப்போதெல்லாம் பெண்கள் வயதை குறிப்பிட கூட தயங்குவது இல்லையாம். ஆனால், உடல் எடையை பரம இரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள்.

ஆண்களிடம் மட்டும் அல்ல, பெண்களிடமும் சம்பாத்தியம் பற்றி கேட்க கூடாதாம். சம்பாத்தியம் என்பது கௌரவ அளவை குறிப்பது என்பதால் இதை யாரும் குறிப்பிட்டு கூறுவது இல்லையாம்.

அவர்களாக கூறும் வரை, ஒரு பெண்ணின் கடந்த கால உறவை பற்றி கேட்பது அநாகரிகமான செயல். கால, நேர, சூழல் எல்லாம் சரியாக வரும் போது அவர்களாக கூறுவார்கள்.

சில பெண்களுக்கு முகத்திலும் முடி முளைக்கும். அது உங்கள் கண்களை உறுத்தினாலும் கூட அவர்களிடம் கேட்டு விட வேண்டாம். இது அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் அளிக்கும் பதிலால் உங்களையும் அசௌகரியமான சூழலை உண்டாக்கலாம்.

எந்தெந்த விஷயங்கள் பெண்களுக்கு உச்ச கட்ட இன்பத்தை அளிக்கும் என்பதை நேரடியாக கேட்டால் கோபம் வருமாம்.

ஒரு பெண்ணை முழுமையாக அறியும் முன்னர், அல்லது அவருடன் போதுமான அளவு உறவு நெருக்கம் அடையும் முன்னர். அவரிடம் ப்ரபோஸ் செய்வது அல்லது காதல் பற்றிய கேள்விகள் கேட்பதை தவிர்க்கவும்.

கல்லூரி மற்றும் அலுவலக இடங்களில் புதிதாக ஒரு பெண் சேர்ந்தால், ப்ரேக் நேரங்களில் இப்படி உரையாடலை நாம் கண்கூட பார்க்க முடியும். தனியாக ஒரு பெண் அமர்ந்திருந்தால், உடனே அந்த இடத்திற்கு சென்று, இங்க யாராச்சும் வராங்களா? நான் இங்க உட்காரலாமா? என பேச்சு கொடுக்க முயற்சிப்பது பெண்களுக்கு பிடிக்காதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]