பெண்களாலும் முடியும்: சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 2000 விஹாரைகளை மூடிவிட்டு, 2000 மதுபானசாலைகளை திறந்தததாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசாங்கம் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் மீது எத்தகு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதில் தான் பிழையைக் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பெண்கள் மதுபான சாலைகளில் பணியாற்ற இடமளிப்பது பெரிய பிரச்சினையாகியுள்ள நிலையில், உலகின் பல நாடுகளில் போர் விமானங்களைக் கூட பெண்கள் இயக்குவதாக, சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

ஆண்களால் செய்ய முடிந்த எதனையும் பெண்களாலும் செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]