பெங்குளூரை வீழ்த்தியது பஞ்சாப் -Universal Tamil

பெங்குளூரை வீழ்த்தியது பஞ்சாப் அணி. எட்டு விக்கெடுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 148ஓட்டங்களைக் குவித்தது. அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன், விஷ்ணு ஆகியோர் சொற்ப ஓட்ட இலக்குடன் வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் ரசிகர்களுக்கு வாண வேடிக்கையை காட்டினார். அவர் களத்தில் இருந்த வரை அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளெவன ஏறியது. டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 46 பந்தில் 3 பவுண்டரி, 9 சிக்சருடன் 89 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் ஆரோன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 149 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்தது. பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மனன் ஓஹ்ரா 21 பந்துகளில் 34 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். அம்லா 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ஓட்டங்களையும் அணித் தலைவர் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 43 ஓட்டங்களுடனும் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.

இன்றைய தினம் பூனே மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன.

பெங்குளூரை வீழ்த்தியது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]