பெங்களூர் அணியின் மோசமான சாதனை

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஆல்அவுட் ஆகி மோசமான சாதனையை படைத்துள்ள அணியாக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பதிவாகியிந்தது.

இம்முறை நடைபெறும் 10ஆவது ஐ.பி.எல். சீசனல் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று பரலவாக எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் கடந்த சீசனில் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 2ஆவது இடத்தை பிடித்திருந்தது. அத்துடன், எல்லா தருணங்களிம் சிறந்த துடுப்பாட்ட வீரர்களும் ரோயல் அணிக்கு வாய்த்துவிடுவார்கள்.

ஐ.பி.எல். சீசன் 10 ஏப்ரல் 5ஆம் திகதி தொடங்கியது. அப்போது பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, டி வில்லியர்ஸ், லோகேஷ் ராகுல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் காயத்தில் அவதிப்பட்டனர். விராட் கோலி முதல் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல், சர்பராஸ் கான் தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளனர்.

டி வில்லியர்ஸ் அவ்வப்போது விளையாடி வருகிறார். முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியிடம் பெங்களூரு அணி தோல்வியடைந்தது. அந்தப் போட்டியில் 172 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது. டெல்லிக்கு எதிரான 2ஆவது போட்டியில் வெற்றிபெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்த பெங்களூர், 18ஆம் திகதி நடைபெற்ற குஜராத் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றது.

23ஆம் திகதி கொல்கத்தாவிற்கு எதிரானப் போட்டியில் 49 ஓட்டங்களில் சுருண்டது. ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் மிகக்குறைவான ஸ்கோர் இதுவாகும். 25ஆம் திகதி சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

நேற்று குஜராத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் 134 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 2 வெற்றி, 1 முடிவு இல்லை, 6 தோல்விகள் மூலம் 5 புள்ளிகள் பெற்றுள்ளது.

இந்த தொடரில் மொத்தம் ஆடிய 9 போட்டிகளில் 3இல் ஆல்அவுட் ஆகியுள்ளது. இதன் மூலம் இதுவரை நடைபெற்றுள்ள 10 ஐ.பி.எல். தொடர்களில் 14 முறை ஆல்அவுட் ஆகி அதிகமுறை ஆல்அவுட் ஆன அணி என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் 14 முறை ஆல்அவுட் ஆகியிருந்தது. நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி ஆல்அவுட் ஆனதன் மூலம் 14 முறை ஆல்அவுட் ஆகி மோசமான சாதனைப் படைத்த ராஜஸ்தான், டெல்லி அணியுடன் இணைந்துள்ளது. 14 முறை ஆல்அவுட் ஆகிய போட்டியில் 13 முறை மூன்று அணிகளும் தோல்விகளையே சந்தித்துள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]