பெக்கோ கவிழ்ந்து கிளிநொச்சி மாணவன் பலி

கிளிநொச்சி

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் பெகோ இயந்திரம் கவிழ்ந்ததில் மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் மாலை, வீதியில் சென்று கொண்டிருந்த குறித்த மாணவன் மீது, சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய பெகோ இயந்திரம் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

முழங்காவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடும் காயமடைந்த பெக்கோ சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]