பூரி கட்டையால் அடித்து மண்டையை உடைத்திருப்பேன்- நடிகை ஆர்த்தியின் ஆவேசப்பேச்சு!!

நடிகை ஆர்த்தி பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து ரசிக்க வைத்தவர். கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் சீசன் 1 லிலும் கலந்துகொண்டார். ஆனால் மனதில் பட்டதை அப்படியே பளிச்சென சொல்பவர்.

அண்மையில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கேள்விப்பட்டு கொந்தளித்திருக்கிறார். “ஜெயலலிதாவின் குணம், ஆளுமையை பார்த்து தான் கட்சியில் சேர்ந்தேன். அவர் இல்லை என்றதும் விலகிவிட்டேன்.

கலைஞர் தான் எனக்கு திருமணம் செய்துவைத்தார். இவர்கள் இருவரும் இருந்த போது மத்திய அரசு நம்மிடம் வாலாட்ட முடிந்ததா, அப்பாவி மக்களை எதற்காக சுட்டுக் கொன்றீர்கள்?

வீடியோவை வெளியிட்ட நடிகை மீது வழக்கு போடுவதா? கருத்து தெரிவித்த எல்லோரின் மீதும் அப்போ வழக்கு போடுங்கள். மிரட்டல்களுக்கு பயப்படுபவள் நானல்ல.

என் கணவர் பி.ஜே.பி ல் இருந்தது உண்மை தான். இப்போது அவர் அதில் இல்லை. இருந்திருந்தால் என் வீட்டிலேயே இருக்க முடியாது. பூரி கட்டையால் அடித்து மண்டையை உடைத்திருப்பேன்” என ஆவேசமாக கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]