பூனை குட்டி போல கணவன் உங்களை சுற்றி வர வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!

ஆண்கள் தான் ரொமாண்டிக்கானவர்கள் என்பார்கள். ஆனால் உண்மையில் ஆண்களை விட பெண்களே ரொமாண்டிக்கானவர்கள்.

தனது கணவனுக்காக பெண்கள் செய்யும் ரொமாண்டிக்கான விடயங்கள் தான் இல்லறத்தில் அதிகப்படியான மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உறவில் நெருக்கத்தை அதிகரிக்கும்.

கணவன் வேலைகளை முடித்து வீடு திரும்பும் போது, அவனை கேட்காமலேயே அவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து பரிமாறலாம்.

வீட்டு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, ஏதேனும் நிகழ்வில் மற்றவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென கணவன் மீது கண்களை திருப்பி சிறு புன்னகையுடன் ஜாடை காண்பிக்கலாம்.

ஒரு சில விஷயங்கள், பொருட்கள் கணவனுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். அதை அவரே கூட மறந்திருப்பார். என்றோ கூறியதை நினைவில் வைத்து அதை தகுந்த தருணத்தில் வாங்கி வந்து பரிசளித்து கணவரை ஆச்சரியத்தில்  ஆழ்த்தலாம்.

காலையில் கணவர் அலுவலகம் கிளம்பியதில் இருந்து மதியம் சாப்பிட்டாச்சா என்று கேட்பதில் தொடங்கி, மாலையில் வர தாமதம் ஆனால் எப்போது வீட்டிற்கு வருவீங்க என்று போனில் கேட்பது வரை எப்போது உங்களையே நினைத்து கொண்டிருக்றேன் என்பதை கணவருக்கு எளிய முறையில் ரொமாண்டிக்காக புரியவைக்கலாம்.

டென்சன், கோபம், கவலையில் இருக்கும் கணவரை தனது கண் அசைவின் மூலம் ரொமாண்டிக் மூடிற்கு கொண்டு செல்ல மனைவியால் மட்டுமே முடியும்.

இதை எல்லாம் செய்து பாருங்க  அப்புறம் உங்க னணவன் ” மனைவி சொல்லே மந்திரம்” என உங்களையே சுத்தி வருவார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]