பூதாகரமாகும் ஜனாதிபதியின் வில்பத்து வர்த்தமானி : செயலாளர் விளக்கம்

முஸ்லிம்களுக்கு சட்டரீதியாக உரிமையுள்ள எந்த முஸ்லிம் மத ஸ்தலங்களோ, கிராமங்களோ அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் அரசுக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி செயலாளர் கையொப்பமிட்டுள்ள கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.

ரிஷாட் பதிர்தீன்
ரிஷாட் பதிர்தீன்

கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு கோரி முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகியபகுதிகள் இணைக்கப்பட்டு “மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ பாதுகாக்கப்பட்ட வனம் என பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 24 ஆம் திகதி தனது ரஷ்ய பயணத்தின் போது கையொப்பமிட்டு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதிர்தீன், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் ரிஸ்புல்லாத் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், ஜனாதிபதி தாம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]