பூதாகரமாகியுள்ள பிணைமுறி மோசடி விவகாரம் : பறிபோகுமா ரவியின் பதவி?

சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனத் தலைவர் அர்ஜூன அலோசியஸ், முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களுக்கு எதிராக பல்வேறு சாட்சியங்கள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளதால் அரசியல் அரங்களில் பெரும் அதிர்வலைகள் தோற்றம் பெற்றுள்ளன.

பூதாகரமாகியுள்ள

குறிப்பாக அர்ஜூன அலோசியஸுடன் ரவி கருணாநாயக்க நிதி அமைச்சராக இருந்த காலத்தில் இடம்பெற்ற தொடர்புகளால் பிணைமுறி மோசடி விவகாரத்தில் ரவி கருணாநாக்கவுக்கு முக்கிய கதாரப்பாத்திரமொன்று இருக்க கூடும் என்று சில அடிப்படை காரணிகளில் தெரியவந்துள்ளாதால் அவருக்கு எதிராக தேசிய அரசு நடவடிக்கை எடுக்க கூடும் என்று கருத்துகள் வலுப்பெற்றுள்ளன.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விநியோகத்தின் போது மோசடி இடம்பெற்றதாக ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமாம், மீன்வள அமைச்சருமான மஹிந்த அமரவீர நிதிமோசடி பிரிவில் முறைப்பாட்டை தாக்கல் செய்திருந்தார். அதன் பின்னரே பிணைமுறி விவகாரம் பூதாகரமானதாக மாறியது.

பூதாகரமாகியுள்ள

அப்போதைய 100நாள் அரசில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டியூ. குணசேகர தலையில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற கோப் குழு இந்த விடயம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தியது. கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில் நாடாளுமன்ற அதிரடியாக கலைக்கப்பட்டு ஆகஸ்ட் 8ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டு புதிய கூட்டரசு அமைப்பெற்றது.

என்றாலும், புதிய நாடாளுமன்றிலும் பிணைமுறி விவகாரம் முற்றியதால் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துநெத்தி தலைமையில் மீண்டும் கோப் குழுவொன்று நியமிக்கப்பட்டது விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த குழுவின் அறிக்கையில் அர்ஜூன மகேந்திரன் பிணைமுறி மோசடியில் நேரடியாக தொடர்ப்பு பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே ஜனாதிபதி ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர்களான கே.டி. சித்திரசிறி, பி.எஸ். ஜயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் கணக்காளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி உள்ளிட்ட மூவர் இவ்வாணைக்குழுவின் விசாரணையாளர்களாக நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பூதாகரமாகியுள்ள

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திபதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிவரையிலான காலப்பகுதியில் மத்திய வங்கியில் இடம்பெற்ற அனைத்து பிணைமுறி மோசடிகள் குறித்தும் இந்த ஆணைக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஆணைக்குழுவால் சர்ச்சைக்குரிய மோசடியாக கருதப்படும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட்ட பிணைமுறிகள் தொடர்பில் இதுவரை பல்வேறு உண்மைகள் வெளிகொணரப்பட்டுள்ளன.

அதன் ஒருகட்டத்திலேயே அர்ஜூன் அலோசியஸ் மற்றும் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து அண்மையில் வெளியாகி தகவல்கள் பெரும் அதிர்வலையை ஏற்பட்படுத்தியிருந்தன. ரவி கருணாநாயக்கவும் அவரது குடும்பமும் தற்போது வசித்துவரும் மொனார்க் ரெசிடன்ஸி மனைத்தொகுதியை அர்ஜூன அலோசியஸே பெற்றுக்கொடுத்துள்ளதாகவும், அதற்கான வாடகையை அவரே செலுத்தியதாகவும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.

பூதாகரமாகியுள்ள

ரவி கரணாநாயக்க நிதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அர்ஜுன அலோசியஸுன் சிங்கபூரில் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாக விசாரணையின் போது ஆணைக்குழு கேள்வியெழுப்பியிருந்தது. குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகள் என பலதரப்பட்ட விடயங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து 2ஆம் திகதி இடம்பெற்ற விசாரணையில் ரவி கருணாநாயக்கவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டிருந்தாலும் அனைத்தையும் அவர் மறுதளித்திருந்தார்.

தேசிய அரசிலும் நாடாளுமன்றத்தில் எதிர்தரப்பிலும் ரவி கருநாயக்கவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளதால் அவர் உடனடியாக பதவி விளக வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. பொது எதிரணி இவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் நேற்றுமுன்தினம் வியா4க்கிழமை சபாநாயகரிடம் சமர்ப்பித்திருந்தது. சு.கவின் தரப்பில் ஜனாதிபதிக்கும் இவரை உடனடியாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதியும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வரும் சூழலில் இன்னும் ஓர் இரு தினங்களில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக சு.கவின் வட்டாரங்களில் அறிய முடியகிறது. ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான கடும் எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளதால் அவரின் பதவி விரைவில் பறிபோகக் கூடிய சூழல் அதிகமாக உள்ளது.

பூதாகரமாகியுள்ள

மறுபுறத்தில் மத்திய வங்கியில் பிணைமுறி தொடர்பிலான விடயங்களை கையாளும் அனைத்து நபர்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டு வருகின்றனர். முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பலமுறை ஆணைக்குழுவில் ஆஜராக சாட்சியமளித்துள்ளார்.
எதிர்வரும் சிலங்களில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மனைவி மற்றும் பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவன தலைவர் அர்ஜூன அலோசியஸ் மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் உட்பட பலர் விசாரணைகளுக்கான அழைக்கப்படவுள்ளனர்.

பிணைமுறி மோசடியால் மத்திய வங்கிக்கு 1200 கோடிவரை இழப்பு ஏற்பட்டதுடன், பிணைமுறி விநியோகிக்கப்பட்ட பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனம் 18 மாதகால பகுதியில் 1650 கோடிவரை வருமானமாக பெற்றதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பெப்பர்சுவலர் ட்ரசரிஸ் நிறுவனத் தலைவர் அர்ஜூன அலோசியஸ் தனது மனைவியின் அப்பிள் கணக்கின் ஊடகா ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ள தனது அப்பிள் கையடக்க தொலைபேசயின் தகவல்களை அழிக்க முற்பட்டதாக கூறி ஆணைக்குழு அவரின் அப்பிள் கணக்குக்கு உட்புக தடைவிதித்தது.

இதுவரை இந்த பிணைமுறி மோசடி தொடர்பில் 11ஆயிரத்திற்கும் அதிகமாக தகவல்கள் பறிமாற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]