பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14

சிவகார்த்திகேயனின்

பூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரமாண்ட படம் SK14

தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, பேரார்வம் மற்றும் கடின உழைப்பு தான் உயர்வுக்கு வித்திடும். அத்தகைய விஷயங்களை கொண்டுள்ள ஒரு முன்மாதிரி என்றால், அது சிவகார்த்திகேயன் தான் என்று வெளிப்படையாக சொல்லலாம். வெற்றியானது வெறுமனே புகழ் மற்றும் பாராட்டுகளால் மட்டுமே மதிப்பிடப்படுவதில்லை. நடிகர்கள் நடிக்கும் படங்களை பொறுத்தும் தெளிவாகிறது. மிகவும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால், சந்தேகமேயில்லாமல் SK14 நடிகர் சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக நிலைநிறுத்தும். அறிவியல் புனைவு படமான இந்த படம் இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ மற்றும் வேலைக்காரன் என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த ஆர்.டி.ராஜா 24AM ஸ்டுடியோ சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை குறித்து ஆர்.டி.ராஜா கூறும்போது, “எங்கள் முந்தைய படங்களான ரெமோ மற்றும் வேலைக்காரன் வெற்றியின் மகிழ்ச்சியை விட, இப்போது எங்களுக்கு அதிகப் பொறுப்புகள் உள்ளதாக உணர்கிறோம். ஒரு தயாரிப்பாளராக, ரவிக்குமாரின் மயக்கும் கதை சொல்லலை நான் உற்சாகமாக கேட்டேன். புதுமையான விஷயங்களை அசாதாரணமாக விவரிப்பதை கண்டு வியந்தேன். அதே சமயம், தயாரிப்பாளராக இந்த படத்தைப் பற்றி நான் எப்படி வடிவமைக்கப் போகிறேன் என்பதைப் பற்றியும் எனக்கு நிறைய கேள்விகள் எழுகின்றன. உலகளவில் புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் சார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது எங்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. மேலும், நிரவ்ஷாவின் ஒளிப்பதிவை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவில் அவரது மாய வித்தைகளை செய்ய தவறியதில்லை. ஒரு நிறுவனமாக எங்கள் வளர்ச்சிக்கு எப்போதும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் இயக்குனர் முத்துராஜ், படத்தில் பணிபுரியும் மற்ற புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போட்டியிடும் சவாலுக்கு தயாராகி விட்டார்.

நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் இந்த ஃபேண்டஸி பொழுதுபோக்கு படத்தில் நகைச்சுவைக்கும் குறைவில்லை. கருணாகரன், யோகி பாபு, விஜய் டிவி புகழ் கோதண்டம் போன்ற உடனடியாக சிரிக்க வைக்கும் நடிகர்கள் இருக்கும் போது நகைச்சுவைக்கு வேறு என்ன தேவை. நடிகை பானுப்பிரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயனின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]