பூஜித ஜயசுந்தரவிற்கு எதிராக முறைப்பாடு

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சிக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்தனவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான செயற்பாடு ஒன்றை உதாசீனம் செய்துள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு சட்டத்தின் 70ஆம் சரத்தின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தம்மை நியமிக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுஇ பொலிஸ் மா அதிபருக்கு செய்த பரிந்துரை உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பதவி உயர்வு வழங்காமையின் ஊடாக பொலிஸ் மா அதிபர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து பேருக்கு பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகளை வழங்குமாறு செய்யப்பட்ட பரிந்துரைக்கு அமைய பொலிஸ் மா அதிபர் நான்கு பேருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ள நிலையில்இ தமக்கு வழங்கவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பாலித சிறிவர்தன சட்டத்தரணி ஊடாக குற்றம் சுமத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]