புலிகள் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைக்கு வாஜ்பாய் ஒத்துழைத்தார் – பிரதமர் ரணில்

புலிகள் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைக்கு வாஜ்பாய் ஒத்துழைத்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்ற பிரதமர் ரணில், தனது அனுதாபத்தை வெளியிட்டிருந்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் பிரவேசத்தை தடுத்து நிறுத்துவதற்கான ஒத்துழைப்புக்களை, இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வழங்கியதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து கூறிய அவர், ‘இதற்கு முன்னர் நான் பிரதமராக பதவி வகித்த காலப் பகுதியில் நாட்டில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக காணப்பட்டது.

அந்த காலப் பகுதியில் விடுதலை புலிகளுக்கெதிரான நடவடிக்கைகளுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மிகவும் சிறந்த முறையில் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்.

இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்த சந்தர்ப்பங்களில் அடல் பிஹாரி வாஜ்பாய் ஒத்துழைப்புக்களை வழங்கினார். இலங்கை இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்கவும் பாரிய உதவிகளை புரிந்தார்.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்காத பட்சத்தில், நாட்டை முன்னொக்கி கொண்டு சென்றிருக்க முடியாத நிலை காணப்பட்டது.

அத்துடன், இலங்கை பின்னடைவுகளை சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும், வாஜ்பாய், பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்’ என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]