புலிகளை அழிக்கும் தேவை இந்தியாவுக்கு இருந்தமையாலேயே இலங்கைக்கு உதவியது : உண்மையை உடைத்த மஹிந்த

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கும் தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதன் காரணமாகவே இந்திய அரசு யுத்தத்திற்கு பூரண ஆதரவு வழங்கியது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்று வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் வலியுறுத்தியுள்ளதாது,

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இந்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியது.

விடுதலைப் புலிகள் இந்திய அரசின் பிரதமர் ரஜிவ் காந்தி மற்றும் அரசின் முக்கிய உறுப்பினர்கள் சிலரை கொலை செய்தனர். அதன் காரணமாக இந்தியாவுக்கு புலிகளை அழிக்க வேண்டிய தேவை இருந்தது.
இந்தியா, பாகிஸ்தான், சீனா மாத்திரமல்ல அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் யுத்தின் போத இலங்கைக்கு ஆதரவு கொடுத்திருந்தன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உங்களை பதவில் இருந்து விலக்க இந்தியா நடவடிக்கை எடுத்தாக புலனாய்வு தகவல்கள் குறிப்பிட்டிருந்ததாக வினவப்பட்டதற்கு,

இறந்த காலம் பற்றி பேசி பயணில்லை. நடப்பவை நடக்கும் என்றும் முன்னாள் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]