புலிகளுடன் தொடர்புடையவர்கள் முழுவிவரம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக 14 இலங்கையர்களுடைய பெயர் விவரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான விசேட வர்த்தமானி ஒன்றை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளில் கீழ், 2016 ஆம் ஆண்டுக்கான விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக குறித்த நபர்களது பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கச்சேரி வீதி, நல்லூர், யாழ்ப்பாணத்தை இலங்கை வசிப்பிடமாக கொண்டிருந்த விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவுத் தலைவரான நடராஜா சத்தியசீலன் அல்லது சீல் மாரன்,

இலக்கம் 55, ஒபேரிய, கொச்சிக்கடை எனும் இலங்கை முகவரியில் வசித்து தற்போது நோர்வேயில் வசிக்கும் புலிகள் அமைப்பின் உறுப்பினரான கமலசிங்கம் அருணகுலசிங்கம் அல்லது கமல்,

சிலா தோட்டம், முல்லைத்தீவில் வசித்த அன்டனிராசா அன்டனி கெலிஸ்டார் அல்லது பரதன்,

தர்மபுரம், பரந்தனில் வசித்த விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச நிதிப்பிரிவின் தலைவரான சிவசுப்ரமணியம் ஜெயகணேஷ் அல்லது கணேஷ் அல்லது சாம்ராஜ்,

சோனபுரி, அடம்பனில் வசித்த விடுதலை புலிகள் அமைப்பின் நிதிசேகரிப்பாளரான பொ. பாஸ்கரன் அல்லது ஜெயகரன்,

கிறீன் வீதி, திருகோணமலையையில் வசித்த விமானப்பிரிவு உறுப்பினரான வேலாயுதன் பிரதீப்குமார் அல்லது கலீபன்,

வல்லிபுரம், முல்லைத்தீவில் வசித்த விமானப்பிரிவு உறுப்பினரான சிவராசா சுரேந்திரன் அல்லது வதான்,

கோண்டாவில் கிழக்கு யாழ்ப்பாணத்தில் வசித்த விமானப்பிரிவு உறுப்பினரான சிவகுருநாதன் முருகதாஸ் அல்லது கதிரவன்,

சிவபுரம், கிளிநொச்சியில் வசித்த விமானப்பிரிவு உறுப்பினரான திருநீலகண்டன் நகுலேஸ்வரன் அல்லது புஸ்பநாதன்.

விவேகாநந்த நகர், கிளிநொச்சியில் வசித்த விமானம் தொடர்பான பறத்தல் ஆலோசகர் மகேஷ்வரன் ரவிச்சந்திரன் அல்லது மெண்டிஸ் அல்லது திருக்குமரன்

மின்சார சபை வீதி, சுன்ணாகம் வடக்கு, யாழ்ப்பாணத்தில் வசித்த அந்த அமைப்பின் உறுப்பினரான சுரேஷ் குமார் பிரதீபன்

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம், யாழ்ப்பாணத்தில் வசித்த புலிகள் அமைப்பின் உறுப்பினரான கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அல்லது மூர்த்தி

மண்டுவில் புதுக்குடியிருப்பில் வசித்த உளவு பிரிவுத் தலைவர் ஜீவரத்ணம் ஜீவகுமார் அல்லது சிரன்ஜீவ் மாஸ்டர்,

மற்றும் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரும் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் 04 ஆம் திகதி சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டவருமான டோனி ஜியான் முருகேசபிள்ளை,

ஆகியோரின் பெயர்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]saltamil.com