புலிகளுக்கு நிதிசேகரித்த 13 இலங்கை தமிழர்களின் தீர்ப்பு திகதி

சுவிட்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 இலங்கை தமிழர்களுக்கும் எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

1999 – 2009ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், விடுதலைப் புலிகளுக்காக 15 மில்லியன் சுவிஸ் பிராங் நிதியை சேகரித்து, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோனார்கள் என்று சுவிஸ், ஜேர்மனி, இலங்கையை சேர்ந்த 13 பேருக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

கடந்த 8 வாரங்களாக பெலின்சோனா சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]