புலிகளின் தங்கமே வடக்கில் கடத்தப்படுவதாக சந்தேகம்!

வடக்கில் அதிகளவான தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், இவை விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கமாக இருக்கலாம் என்று சுங்கத் திணைகக்களப் பேச்சாளர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

வடக்கு கடலில் தங்க கடத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில் கடற்படை தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், மன்னார் கடலில் நேற்றுமுன்தினம் மாலை 24.2 கிலோகிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

படகு ஒன்றில், கொண்டு செல்லப்பட்ட போது தலா 100 கிராம் எடையுள்ள 242 தங்க கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றினர். இதன் மதிப்பு 150 மில்லியன் ரூபாயாகும். படகில் இருந்த மூவர் கைது செய்யபட்டு யாழ்ப்பாணத்தில் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான தங்கம், போரின் இறுதியில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதில் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]