புலிகளிடம் கைப்பற்றப்பட்ட 300 கோடி எங்கே?

இறுதிக்கட்டப்போரின்போது தமிழீழ வைப்பகங்களிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசு கைப்பற்றிய 300 கோடி ரூபாவையாவது வடக்கில் வறுமையில் வாடும் மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புலிகளிடம்

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி மூலோபாய சட்டத்தின் கீழான செஸ்வரி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

வடக்கில் மக்கள் பலர் வறுமையில் வாடுகின்றனர். காலநிலை மாற்றங்களால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் சுமைகள் தாங்கமுடியாமல் வர்த்தகர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்ற மக்கள் தமது சொத்துகளை இழந்து வருகின்றனர். இந்த மக்களை இந்த அரசு பாதுகாக்கவில்லை. உதவிகளை வழங்கவில்லை. நிவாரண அறிவிப்புகளை வெளியிடவில்லை.

வன்னியில் இறுதி யுத்தம் நடந்தபோது அந்த மக்களின் தங்கத்தை எடுத்துக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷவும், சரத் பொன்சேகாவும் அதனை தமக்குள் பங்கிட்டுக்கொண்டனர். அது மக்களுக்கு மீளக் கையளிக்கப்படவில்லை.

அத்துடன், வடக்கு மக்கள் தமிழீழ புனர்வாழ்வுக் கழகத்தின் தமிழீழ வைப்பகங்களில் வைப்பிலிட்டுள்ள 300 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை மஹிந்த அரசு எடுத்துக்கொண்டது. அந்தப் பணத்திலாவது வடக்கு மக்களுக்கு ஏதாவது உதவிகளைச் செய்யவும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]