புலம்பெயரந்து மேலத்தேய நாடுகளில் உள்ள ஒருசிலர் தங்களுக்கு நிரந்தர குடியுரிமைக்காக இங்குள்ளவர்களுக்கு பணம் வழங்கி மீண்டுமொரு பேராட்டத்தை ஆரம்பிக்க முயற்சி

புலம்பெயரந்து

புலம்பெயரந்து மேலத்தேய நாடுகளில் உள்ள ஒருசிலர் தங்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்குள்ளவர்களுக்கு பணம் வழங்கி மீண்டுமொரு பேராட்டத்தை ஆரம்பிக்க முயற்சி

புலம்பெயரந்து மேலத்தேய நாடுகளில் உள்ள ஒருசிலர் தங்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்குள்ளவர்களுக்கு பணம் வழங்கி மீண்டுமொரு பேராட்டத்தை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மேலத்தேய நாடுகளிலிருந்து போராட்டத்தை தூண்டுவதற்கு முயற்சிப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்ப முடியுமா? இனியொருபோதும் எங்கள் சமூகத்தை இந்த மண்ணிலே இழப்பதற்கு நாங்கள் தயாரில்லை. நாங்கள் கல்வி பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு – மயிலம்பாவெளியில் சனிக்கிமை (06) மாலை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

“இலங்கைத் தமிழரசுசக் கட்சி அதன்பின் உருவான தமிழர் விடுதலைக் கூட்டணி பின்பு பரிநாமமெடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாவிட்டால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் இல்லாமல் போயிருக்கும்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் தென்னிலங்கையிலுள்ள பணம் படைத்த செல்வந்தர்களை பாசிக்குடாவிற்கு கொண்டு வந்து எமது நிலங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள். பாசிக்குடா, மாங்ககேணி மற்றும் சல்லித்தீவிலே எமது மண்ணை விற்வர்கள் நீங்கள் அரச அதிகாரிகளை காட்டிக் கொடுத்தவர்கள் நீங்கள். பாசிக்குடாவசில் தமது வாழ்வாரத்தை நடத்திய 540 மீனவக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. பாசிக்குடா நட்சத்திர விடுதிகளில் பெரும்பான்மைச் சமூகத்தவரே அதிகமாக வேலை செய்கிறார்கள்.

தமிழ் மக்களையும் மொழியையும் மதத்தையும் பாதுகாப்பதற்காக நங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். மட்டக்கள்பபு மங்களாராமய சிகாராதிபதி அம்பிட்டியே சுமணரெத்ன தேரர் பதுளை வீதியில் பௌத்த சிலை நிறுவ வந்த போது தேரருடன் சேர்ந்து எங்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் இந்த பகுதியிலே வேட்பாளராக நிருத்தப்பட்டுள்ளார்கள்.

வாகனேரியில் இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டன ஆமை அறைச்சி வெட்டிப் போடப்பட்டன. அங்கு சென்று மக்களுடன் மக்களாக நின்று குரல்கொடுப்பவர்கபளதான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர். ஆந்த நேரத்தில் அரசாங்கத்தின் கைத்கூலிகளாக இருந்தவர்கள் தற்டபோது எமது மக்களையும் மண்ணையும் காப்பாற்றப்போகிறார்களாம்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட போது கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட இந்த மண்ணின் மீட்புக்காக போராடிய முன்னாள் போராளிகள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ முன்படும் போது அவர்களை நிம்மதியதக வாழ விடாது காட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தவர்கள் இன்று தேர்தல் கேட்க நினைக்கும் பொழுது வெட்கக் கேடாக உள்ளது அவர்களுடைய கட்சிகளில் எங்களுடையவர்கள் போய் நிற்பது வேதனையாக உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இந்து ஆலயத்தை உடைத்தெறிந்து மீன் சந்தையைக் கொண்டுவந்த ஹிஸ்புல்லாவுடன் சேர்ந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டதை நாங்கள் மறக்க முடியாது. அந்த கட்சி சேர்த்துக் கொடுத்த வாக்குகளினால்தான் ஹிஸ்புல்லா அமைச்சராக வந்தார். இவர்கள் தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போவதாக புதுக்கதை பேசுகிறார்கள்.

30 வருடங்களுக்கு மேலாக துன்பங்களை அனுபவித்துவரும் எமது மக்களுக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக புதிய அரசியலமைப்பில் எழுத்து மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு பயணிக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் தனது அரசியில் அனுபவம் முதிர்ச்சியின் அடிப்படையில் சர்வதேசத்துடனும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இனி ஒரு காலமும் எமது இளைஞர்கள் ஆயதமெந்திப் போராட நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.

புலம்பெயரந்து மேலத்தேய நாடுகளில் உள்ள ஒருசிலர் தங்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இங்குள்ளவர்களுக்கு பணம் வழங்கி மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.

மேலத்தேய நாடுகளிலிருந்து போராட்டத்தை தூண்டுவதற்கு முயற்சிப்பவர்கள் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்ப முடியுமா? இனியொருபோதும் எங்கள் சமூகத்தை இந்த மண்ணிலே இழப்பதற்கு நாங்கள் தயாரில்லை. நாங்கள் கல்வி பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும்.

தமிழ் தேசியம் காலத்திற்கு காலம் தடம் மாறிவந்துள்ளது ஆனால் தமிழ் தேசிய தடம் புரளக்கூடாது. 2015ல் வெற்றிலைக்க வாக்குகளைச் சேகரித்துக் கொடுத்து சகோதர சமூகத்தைச் சேர்ந்தவவரை அமைச்சராக்கியவர்கள் தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கப் போகிறார்களாம்.

சகோதர முஸ்லிம் இனத்தை நான் பாராட்டுகிறேன். அவர்கள் இனம் சார்ந்து சிந்திக்ககூடியவர்கள் விலைபோகாதவர்கள். ஒரு முஸ்லிம் வட்டாரத்தில் வேட்பாளரை நிறுத்தி வாக்கு சேகரிக்க உங்களால் முடியுமா?

ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி தமிழ் பகுதிகளில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபைர் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். காலத்துக்கு காலம் வேசங்களை மாற்றிக்கொண்டு திரிபவர்களின் பின்பு எமது மக்கள் செல்லக் கூடாது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]